அன்பிற்கினியாள் திரைவிமர்சனம்

Production : Arun Pandiyan, Kamala Pandiyan Director : Gokul Cast : Arun Pandiyan, Praveen, Keerthi Pandiyan, Jayaraj Kolikodu, Adinat Sasi, Boobathy Raja, Ravindra Vijay, Cinematography : Magesh Muthusamy Editing : Pradeep E. Ragavan Music : Javeed Riyas

அருண் பாண்டியன், பிரவீன், கீர்த்தி பாண்டியன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘அன்பிற்கினியாள்’. கோகுல் இப்படத்தை இயக்க, ஜாவித் ரியாஸ் இசையமைத்திருக்கிறார். ‘ஹெலன்’ என்ற பெயரில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற இப்படத்தை தன் மகளுக்காக தமிழில் மறுஉருவாக்கம் செய்திருக்கிறார் அருண் பாண்டியன். இப்படத்தின் விமர்சனத்தைப் பார்ப்போம்.

கதைக்களம்

அப்பா அருண்பாண்டியன் மீது அதிக பாசம் கொண்ட கீர்த்தி பாண்டியன், அவர் வாங்கிய கடனை அடைக்க நர்சிங் படித்துவிட்டு கனடா செல்ல முயற்சியெடுக்கிறார். அதுவரை தனியார் உணவகத்தில் பணிபுரிகிறார். தாய் இல்லாத தன் மகளை அன்போடும், அரவணைப்போடும் வளர்க்கிறார் அருண்பாண்டியன். கடனுக்காக தன் மகள் கனடா செல்வதை விரும்பாத அருண்பாண்டியன் கீர்த்தியை தன்னுடன் இருக்கும்படி வற்புறுத்துகிறார். இந்நிலையில், பிரவீனை காதலிக்கும் கீர்த்தி தன் தந்தையிடம் காதலை மறைக்கிறார். ஒரு கட்டத்தில் அருண்பாண்டியனுக்கு கீர்த்தியின் காதல் தெரிய வருகிறது. இதனால், கீர்த்தியுடன் பேச மறுக்கிறார் அருண் பாண்டியன். இறுதியில் கீர்த்தியின் காதலை அருண்பாண்டியன் ஏற்றுக் கொண்டாரா? கீர்த்தி கனடாவிற்கு சென்று அப்பாவின் கடனை அடைக்கிறாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

பர்ஃபாமன்ஸ்

அதிரடியான கதாபாத்திரங்களிலேயே நடித்துவந்த அருண்பாண்டியன் இப்படத்தில் மகளின் மேல் அளவுக் கடந்த பாசம் வைத்திருக்கும் தந்தையாக தன்னை மெருகேற்றியிருக்கிறார். அப்பாவுடன் நடிக்கும் வாய்ப்பு சினிமாத் துறையில் இருக்கும் எல்லோருக்கும் கிட்டாது. அப்படி கிடைத்த வாய்ப்பை தனக்கானதாக மாற்றிக் கொண்டு படம் பார்ப்பவர்களை தன் வீட்டுப் பெண்ணாக உணர வைக்கிறார் கீர்த்தி பாண்டியன். மகளுக்காக அப்பா உருகும் காட்சிகளிலும், அப்பாவிற்காக மகள் உருகும் காட்சிகளிலும் அருண் பாண்டியனும், கீர்த்தி பாண்டியனும் போட்டிப் போட்டிக் கொண்டு நடித்திருக்கிறார்கள். புதுமுகம் பிரவீனும் அப்பா மகளுக்கு சளைத்தவர் அல்ல என்பதை தன் பக்குவமான நடிப்பால் நிரூபித்திருக்கிறார்.

குறைந்தபட்ச கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு திரைக்கதையை சுவாரஸியமாக கொடுத்தால் எந்த படமும் வெற்றியடையும் என்பதற்கு ‘அன்பிற்கினியாள்’ மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இப்பணியை இயக்குநர் கோகுல் மிக அழகாகச் செய்திருக்கிறார். இரண்டாம் பாதியில் அனைவரையும் இருக்கை நுனியில் உட்கார வைத்து திக் திக் நிமிடங்களை கொடுத்திருக்கிறார் இயக்குநர் கோகுல். ஜாவித் ரியாஸ் தன் இசையால் காட்சிகள் இன்னும் விறுவிறுப்பாகவே நகர்கின்றன. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும், பிரதீப் ஈ.ராகவின் படத்தொகுப்பும் ஒரே இடத்தையும் சலிப்படைய வைக்காமல் செய்கிறது. ஜெயராஜ் கோலிக்கோடு, அடிநாட் சசி, பூபதி ராஜா, ரவீந்திர விஜய் ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இயக்குநர் கோகுலும் இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சிறப்பம்சங்கள்
திரைக்கதை
இசை


பலவீனங்கள்
சில காட்சிகள் சினிமாத்தனம்

Verdict : அன்பிற்கினியாள் அனைவரையும் அரவணைத்துச் செல்கிறாள்
Thandoratimes Rating :
Visitors Rating
★★★★★
Click For Rate
அன்பிற்கினியாள் திரைவிமர்சனம், Anbirkiniyal Movie Review, Arun Pandiyan, Praveen, Keerthi Pandiyan, Jayaraj Kolikodu, Adinat Sasi, Boobathy Raja, Ravindra Vijay