‘வேட்டை நாய்’ திரை விமர்சனம்

Production : R.K.Suresh Director : JaiShankar Cast : Ramki, R.K.Suresh, Subhiksha, Rama, Namo Narayana Cinematography : Eshwaran Music : Ganesh Chandrasekar Story : JaiShankar Dialogue : JaiShankar

ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில் ஜெய்சங்கர் இயக்க, ராம்கி, ஆர்.கே.சுரேஷ், சுபிக்ஷா, ரமா, நமோ நாராயணா மற்றும் பலர் நடித்திருக்கும் வேட்டை நாய்’ படத்தின் திரை விமர்சனத்தை பார்ப்போம்.

கதைக்களம்

பெற்றோரை இழந்த ஆர்.கே. சுரேஷ் அத்தை, மாமா வளர்ப்பில் வளர்கிறார். அந்த ஊரில் ரவுடிசம் செய்யும் ராம்கியிடம் விசுவாசமான அடியாளாக இருக்கிறார். பொறுப்பற்று இருக்கும் அண்ணன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தால் பொறுப்பு வந்து விடும் என்று பெண் பார்க்க செல்கிறார் ஆர்.கே. சுரேஷின் அத்தை ரமா. அங்கு சுபிக்ஷாவை பிடித்து போக கட்டாய திருமணம் செய்கிறார் ஆர்.கே. சுரேஷ். அடியாள் வேலையை விட்டு விட்டு உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார் சுபிக்ஷா. மனைவியின் கட்டளையை ஏற்றாரா? ராம்கியிடம் இருந்து விலகி அவரின் பகையை எப்படி தீர்க்கிறார்? என்பதே படத்தின் மீதிக் கதை.

பர்ஃபாமன்ஸ்

ஆர்.கே. சுரேஷ் முரடனாகவும், அதே சமயம் மனைவியின் மீதான கண்முடித்தனமான காதலனாகவும் நடிக்க முயற்சித்திருக்கிறார். சுபிக்ஷா தன் கதாபாத்திரத்தை உணர்ந்து செவ்வனே நடித்திருக்கிறார். ராம்கிக்கு ரவுடி பாத்திரம் பொருந்தவில்லை. ரமாவின் நடிப்பு சிறப்பு.

இயக்குநர் நல்ல கருத்தை கூற முயற்சி செய்திருக்கிறார். ஆனால், கதையில் சிறிது மாற்றம் செய்திருக்கலாம். அல்லது திரைக்கதையை சற்று சுவரசியமாவது கொடுத்திருக்கலாம். 'மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு' என்ற டேக் படம் முழுவதும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. காட்சிக்கு காட்சி புகையும், மதுவும் சகிக்கவில்லை.

சிறப்பம்சங்கள்
சுபிக்ஷாவின் நடிப்பு

பலவீனங்கள்
வலுவிழந்த வில்லன் பாத்திரம்
புளித்துப்போன திரைக்கதை

Verdict : வேட்டை நாய் குறைக்கவில்லை
Thandoratimes Rating :
Visitors Rating
★★★★★
Click For Rate
Ramki, R.K.Suresh, Subhiksha, Rama, Namo Narayana, Vettai Naai Movie Review