விடியல் ஆட்சியில் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை... 10ம் வகுப்பு மாணவி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி!

கிருஷ்ணகிரியில் சாதி சான்றிதழ் இல்லாததால் மாணவி ஒருவர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியவில்லை எனக் குற்றம் சாட்டி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள செல்லக்குட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக், மங்கம்மாள் தம்பதியினர் எங்களுக்கு 10ம் வகுப்பு படிக்கும் தமிழ்விழி மற்றும் கல்லூரி படிக்கும் முத்தமிழ் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.தற்போது 10-ம் வகுப்பு தேர்வு நடைபெறுவதால் மகளிடம் சாதி சான்றிதழ் கேட்கின்றனர். இல்லை என்பதற்காக தேர்வு எழுத அனுமதிக்க மாட்டேன் என தெரிவிக்கின்றனர்.

பன்னியாண்டி சமுதாயத்தை நாங்கள் 10 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் கேட்டு போராடி வந்தும் யாரும் சான்றிதழ் வழங்காததால் குடும்பத்துடன் தீ குளித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி நடந்து வரும் தமிழகத்தில் சாதி சான்றிதழ் இல்லை என்பதற்காக மாணவி ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.