நெல்லையப்பர் கோவில் யானைக்கு 18 ஆயிரம் மதிப்பிலான செருப்புகள் - காரணம் இதுதான்

நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு செருப்பு செய்து அணிவித்த பக்தர்களின் செயல் நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலுக்குச் சொந்தமாக காந்திமதி என்ற யானை உள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள காந்திமதி யானை நடக்கும்போது கால் வலி ஏற்படாமல் இருக்கவும், மூட்டு வலி ஏற்படாமல் இருக்கவும் மருத்துவ குணம் வாய்ந்த ரூ. 12000 மதிப்பிலான தோல் செருப்புகளை செய்து பக்தர்கள் யானைக்கு அணிவித்துள்ளனர்.தமிழகத்திலேயே நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் யானையின் கால்களுக்கு தான் முதல் முதலாக செருப்பு அணிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.