8வது முறையாக தொடர்ந்து உயர்வு... இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்!!

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.106.69-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றி நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

அந்த வகையில், மார்ச் 22 முதல் (மார்ச் 24 தவிர) கடந்த 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பிறகிலிருந்து இந்த மாற்றங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.106.69-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.96.76-க்கும் விற்பனையாகி வருகிறது.

கடந்த 9 நாட்களில் 8 வது முறையாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளன.அதன்படி,கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.29 ஆகவும் ,டீசல் விலை லிட்டருக்கு ரூ.5.33 ஆகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.