ஒரு பயண டிக்கெட்டின் விலை ரூ.205 கோடி! எதற்கு இவ்வளவு விலை? என்ன சிறப்பம்சம்?

அமேசான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பெஸாஸ் உடன் விண்வெளிக்கு பயணிப்பதற்கான பயண டிக்கெட் 205 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 20ஆம் தேதி ஜெஃப் பெஸாஸ் மற்றும் அவரது சகோதர் விண்வெளிக்கு செல்ல இருக்கின்றனர். பெஸாஸின் 'Blue Origin' நிறுவனம் விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்ப உள்ளது. அவருடன் யார் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான டிக்கெட் ஏலத்தில் விடப்பட்டது.

இந்த பயண டிக்கெட்டுக்கான ஏலம் 4.8 மில்லியன் அமெரிக்க டாலர்களில் ஆரம்பமானது. . சுமார் 159 நாடுகளை சேர்ந்த 7000க்கும் அதிகமானோர் இந்த ஏலத்தில் பங்கேற்றனர் . இறுதியில் 8 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு பயண டிக்கெட் ஏலம் எடுக்கப்பட்டது. 

பயண டிக்கெட்டை ஏலத்தில் வாங்கியுள்ள நபரும் பெஸாஸ் மற்றும் அவரது சகோதரருடன் விண்வெளிக்கு பயணிக்கவுள்ளார். அவர் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. Blue Origin நிறுவனம் உருவாக்கியுள்ள New Shepard ராக்கெட்டில் மூவரும் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.