அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை உச்சகட்டத்தை அடைந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், கட்சியின் பொதுக்குழு மீண்டும் இன்று ஜூலை 11ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணி முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.