நகை வாங்க போகிறீர்களா?.. தங்கம் விலை குறைவு!

இந்திய நடுத்தர குடும்பங்கள் தங்களது முதலீடுகளை தங்கத்தில் செலுத்துவது வழக்கம். அதனால் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாறுபாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவர்.

அந்த வகையில் இன்று தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு இன்று நல்ல செய்தி வந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 200 ரூபாய் குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.

சென்னையில் இன்று (ஜூன் 15) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,715 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,740 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 200 ரூபாய் குறைந்து 37,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூய தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 5,139 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 5,114 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, நேற்று 41,112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 200 ரூபாய் குறைந்து 40,912 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.66 ஆக இருந்தது. இன்றும் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை 66,000 ரூபாயாக விற்பனையாகிறது.