Ashley Barty enter Sinsinatty Tennis semi final

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் சின்சினாட்டி டென்னிஸ் தொடரின் காலியிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ பார்டி, கிரீஸ் நாட்டின் மரியா சக்காரியா மோதினார்கள்."

இதில், ஆரம்பத்தில் இருந்தே அபாரமாக விளையாடிய ஆஷ்லீ பார்டி, 5-7, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் மரியா சக்காரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இவர் சின்சினாட்டி டென்னிஸில் அரையிறுதிக்கு முன்னேறுவது இது தான் முதல் முறையாகும்.

இந்த வெற்றியின் மூலம், டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தி நெருங்கியிருக்கும் ஆஷ்லீ பார்டி, இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், முதலிடத்தை பிடித்துவிடுவார். தற்போது முதலிடத்தில் இருக்கும் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, காயம் காரணமாக சின்சினாட்டி டென்னிஸ் தொடரின் காலியிறுதி போட்டியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.