பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி!!

பாகிஸ்தான் அணியை 115 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா தொடரை 1-0 என கைப்பற்றி அசத்தியது.

பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தன. இதைத்தொடர்ந்து, லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 115 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணமாக இந்த ஆண்டு வந்தது. 1998-ல் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தபோது ​​டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 1-0 என கைப்பற்றியது. தற்போது மீண்டும் 2022-ல் பாகிஸ்தானில் நடந்த 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது. 

இதனால், பாகிஸ்தானில் ஆஸ்திரேலியா தனது மூன்றாவது டெஸ்ட் தொடரை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.