Back to Back earthquake occurs in America ; People get panic

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அதன் ரிக்டர் அளவு 7.1 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் ஏற்பாட்டை நிலநடுக்கத்தால் அப்பகுதியிலுள்ள காட்டுங்கள் அனைத்தும் குலுங்கின. இரண்டு நாட்களுக்கு முன்னதாக ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் நேற்று முன்தினம் ஏற்கனவே 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு அதனருகிலுள்ள பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டபோதே, அதைவிட பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.