அதிர்ச்சி…வீட்டு உபயோக சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டது!

பொதுவாக சமையல், வணிக கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.3 அதிகரித்து ரூ.1018.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.1068.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை அதிகரிப்பு ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும்,வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.8.50 குறைந்து ரூ.2,177.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.