ப.சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 

தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட அவர்களுக்கு தொடர்புடைய 7 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் 7 சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில்

இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எம்பி கார்த்திக் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், எத்தனை முறை தான் சோதனை நடத்துவீர்கள் என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.