கடந்த 14 ம் தேதி, புல்வாமாவில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களும் அடங்குவர்.
சென்னை R3 காவல் நிலையம் சார்பாக உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கு துறை இன்ஸ்பெக்டர் திரு.சூர்யலிங்கம் மற்றும் போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். காவலர்கள், அசோக் நகரை சுற்றியுள்ள ஆட்டோ ஓட்டுனர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் தபால் நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள், உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.