இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த சென்னை.. பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்ற ராஜஸ்தான்!

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி, 19.4 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் அடித்து வெற்றியை பதிவு செய்து, 3-வது அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்குள் நுழைந்தது.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று மே 20ம் தேதி நடைபெற்ற 68-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, பேட்டிங்கை தேர்வு செய்ய, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் – பட்லர் களமிறங்கினார்கள்.

இதில் 2 ரன்கள் அடித்து பட்லர் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரைதொடர்ந்து 3 ரன்கள் அடித்து படிக்கல் வெளியேற, மத்தியில் சிறப்பாக ஆடிவந்த ஜெய்ஸ்வால் 59 ரன்கள் அடித்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய அஸ்வின், அதிரடியாக ஆடி 40 ரன்கள் குவித்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி, 19.4 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் அடித்து வெற்றியை சந்தித்து, பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைந்தது. 

இன்று நடைபெறும் போட்டியில் பிளே ஆப்ஸ் அணிக்குள் நுழையும் அந்த 4-வது அணி யார் என்று தெரிந்துவிடும்.