Copa America finals ; Brazil becomes Champion by defeating Chile

தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு இடையில் நடைபெறும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பெரு அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி பிரேசில் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

அர்ஜென்டினா அணியை வீழ்த்தி பிரேசில் அணியும், சிலி அணியை வீழ்த்தி பெரு அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. ஆட்டத்தின் 15 - வது நிமிடத்தில் பிரேசில் அணி வீரர் எவர்டன் முதல் கோலை அடித்தார். 44 - வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பெரு அணி கோல் அடித்தது. முதல் பாதி முடியும் தருவாயில் பிரேசில் அணியின் கேப்ரியல் ஜீஸஸ் கோல் அடித்தார்.

முதல் பாதியின் முடிவில் பிரேசில் அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் இரு அணிகளும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் பிரேசில் வீரர் பெனால்டி வாய்ப்பில் கோலடிக்க 3 - 1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஒன்பதாவது முறையாக கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பையை பிரேசில் அணி வென்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி சிலி அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.