உலகின் பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா…

பிரேசிலின் நட்சத்திர மற்றும் முன்கள கால்பந்தாட்ட வீரர் நெய்மர், தற்போது PSG எனப்படும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் எனும் கிளப் அணி சார்பாக விளையாடி வருகிறார்.

சமீபத்தில் நடந்த UEFA சாம்பியன் லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் பைரன் முனிச் கிளப் அணியிடம் பாரிஸ்-சாயின்ட் ஜெர்மைன் அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில், அணி சார்பில் நடத்தப்பட்ட உடல் பரிசோதனையில் பாரிஸ்-சாயின்ட் ஜெர்மைன் அணியில் விளையாடிய நெய்மர், ஏஞ்சல் டிமரியா மற்றும் லியான்டிரோ ப்ரேடஸ் ஆகிய 3 வீரர்களுக்கும் கொரோனா நோய் தொற்று அறிகுறி இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல் PSG கிளப் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து PSG கிளப் அணி வீரர்கள் அனைவருக்கும் நாளை கொரோனா நோய் பரிசோதனை நடத்தப்பட உள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.