உலகில் 110 நாடுகளுக்கு மேலாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உலகில் 110 நாடுகளுக்கு மேலாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது என சமூகம் மற்றும் சுகாதார நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் பேட்டி. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.  இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொற்று பாதிப்பு குறித்தும் அதை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று உயர் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் உலகில் 110 நாடுகளுக்கு மேலாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழப்பு அதிகம் இல்லை என்றாலும் வயது வரம்பு இன்றி அனைவருக்கும் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.