மாமல்லபுரத்தில் நாட்டிய விழா இன்று தொடக்கம்!!

தமிழகத்தின் முக்கியமான புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில் இன்று நாட்டிய விழா தொடங்குகிறது. தொல்லியல் கலைச்சிற்ப சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் - ஜனவரி மாதங்களில் நாட்டிய விழா நடத்தப்படுகிறது.

மத்திய - மாநில சுற்றுலாத் துறைகள் இணைந்து நடத்தும் இந்த விழாவில், பரதம், கரகம், காவடி, ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைகள் அரங்கேற்றப்படும். கடந்த ஆண்டு, கொரோனா அச்சம் காரணமாக விழா நடைபெறவில்லை.

இந்த ஆண்டு விழா இன்று முதல் ஜனவரி 22 ஆம் தேதி வரை நடைபெறும்.