டெல்லி தீ விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
டெல்லி தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்திருப்பது  வேதனை அளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய விழைகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.