டெல்லி : மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு …!

மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகிய மம்தா பானர்ஜி அவர்கள் 2 நாள் பயணமாக தலைநகர் டெல்லிக்கு வருகை தந்துள்ளார்.

நேற்று டெல்லி வருகை தந்த மம்தா பானர்ஜி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமாகிய அபிஷேக் பானர்ஜியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு நிகந்துள்ளது. சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது, முன்னதாக நடைபெற்ற பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற கேஜ்ரிவாலுக்கு மம்தா வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.