நயன்தாராவுடன் ஜோடி போடும் தல தோனி!!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இயக்குநர் விக்னேஷ் சிவன், தல தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். அப்போது விக்னேஷ் இயக்கத்தில் தோனி நடிக்கவுள்ளதாக பேச்சுக்கள் எழுந்த நிலையில் தற்போது அதை மெய்பிக்கும் விதமாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கிரிக்கெட் கிரவுண்டில் அதிரடி காட்டி கோடானு கோடி ரசிகர்களை தன்வசப் படுத்தியவர் எம் எஸ் தோனி. 40 வயதாகும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். அடுத்த சீசன் அவர் விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்தபோது கண்டிப்பாக மஞ்சள் ஜெர்சியுடன் தன்னை பார்க்கலாம் என்று ரசிகர்கள் மனதில் பாலைவார்க்கும் விதமாக பதில் சொன்னார். எனவே அவர் கண்டிப்பாக அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தனது அற்புதமான ஆட்டத்தால் ரசிகர்களை கட்டிப்போட்ட தோனி, சில விளம்பர படங்களிலும் தோன்றி க்யூட்டான நடிப்பால் க்ளாப்ஸ் அள்ளியுள்ளார்.

இதையடுத்து அவர் தற்போது கோலிவுட் சினிமாவில் அதிரடி என்ட்ரி தர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தோனியை சந்தித்த இயக்குநர் விக்னேஷ் சிவன் அவருக்கு பூங்கொத்து கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "என்னுடைய ரோல் மாடல், என்னுடைய ஹீரோ, என்னுடைய நம்பிக்கை நட்சத்திரம்...இவருடன் நான் இருக்கும் இந்தப் புகைப்படத்துக்கு என்ன கேப்ஷன் போட்டாலும், அது அவரை நான் சந்தித்த அந்த நொடியில் எனக்கு ஏற்பட்ட உணர்வை முழுமையாக வெளிப்படுத்தாது.நான் இன்று அவரை நல்ல கதையுடன் சந்தித்தேன். விரைவில் அவருக்கு ஆக்‌ஷன் சொல்லி அவரை இயக்கும் நாள் வரும்!" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தோனி நடிக்கவுள்ளார் என பல ஊடகங்களும் ஒருசேர இதனை குறிப்பிட்டு அன்றைய தினத்தில் ஹாட் செய்தியாக்கின. அந்த வகையிஸ் தோனி தற்போது கோலிவுட் சினிமாவில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளாராம். ஆனால் நடிகராக இல்லாமல் தயாரிப்பாளராக புதிய புரொடக்‌ஷன் நிறுவனத்தை தொடங்கி படத்தை தயாரிக்கவுள்ளாராம்.

தோனியின் தயாரிப்பு நிறுவனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உதவியாளர் சஞ்சய் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் நயன்தாராவை வைத்து முதல் படத்தினை இயக்கினால் நல்ல வரவேற்பை பெறலாம் என ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதற்கான ஆரம்பகட்ட பேச்வார்த்தை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.