சில நாட்களுக்கு இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் இன்று காலை சுமார் 10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 5.5 ஆகா பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.
2004 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உலகம் முழுவதும் சுனாமி அலை தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் நடந்து வரும் நிலநடுக்கத்தில் மக்கள் பீதியடைந்துள்ளனர்