இங்கிலாந்து பேட்மிண்டன்: பி.வி.சிந்து, சாய்னா வெளியேற்றம்..!

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

2-வது சுற்றில் ஜப்பான் வீராங்கனை டகாஹஷியிடம் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியை சந்தித்து வெளியேறினார். மற்றோரு 2-வது சுற்றில் ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சியிடம் இந்திய வீராங்கனை சாய்னா தோல்வியடைந்தார். அதேபோல 2-வது சுற்றில்  இந்தோனோஷிய வீரர் அந்தோணி சினிசுகாவிடம் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியை சந்தித்தார்.இந்திய வீரர் லக்ஷயா சென் உலகின் மூன்றாம் நிலை வீரரான ஆண்டர்ஸ் ஆண்டோசெனை தோற்கடித்தார்.  ஆண்கள் ஒற்றையர் பிரிவில்  ஆண்டர்ஸ் ஆண்டோசெனை ,  லக்ஷ்யா 21-16, 21-18 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தார். ஆண்டர்ஸை வீழ்த்தியதால் லக்ஷ்யா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.