யூரோ கோப்பை: ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணி வெளியேற்றம்!!

யூரோ கோப்பை தொடரில் இருந்து, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணி வெளியேறியது கால்பந்து ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில், காலிறுதிக்கு தகுதிபெறும் நாக் அவுட் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், நெதர்லாந்து மற்றும் செக் குடியரசு அணிகள் நேருக்கு நேர் மோதி பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக தொடங்கிய போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இரண்டாம் பாதியில், செக் குடியரசின் வீரர் தாமஸ் ஹோல்ஸ், லாவகமாக கோல் அடித்து, ஆட்டத்தின் முதல் கோல் கணக்கை தொடங்கினார். இதனை தொடர்ந்து அதே அணியின் , சக வீரர் பாட்ரிக் சிக் கோல் அடித்து அசத்தினார். நெதர்லாந்து தரப்பில் கோல் அடிக்கப்படவில்லை. இதனால், 2க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று செக் குடியரசு அணி காலிறுதிக்குள் நுழைந்தது.