யூரோ கோப்பை கால்பந்து தொடரில், உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெல்ஜியம் அணியை வீழ்த்தி இத்தாலி அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
24 நாடுகள் விளையாடிவரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதி சுற்று தொடங்கியுள்ளது. முதல் ஆட்டத்தில், ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், முதல் 8வது நிமிடத்திலேயே ஸ்பெயின் வீரர் ஜோர்டி ஆல்பா அடித்த பந்து, ஸ்விட்சர்லாந்து வீரர் டெனிஸ் சகாரியாவின் காலில் பட்டு கோலாக மாறியது.
இதன்மூலம் முதல்பாதியில் ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து, இரண்டாம் பாதியில் சுவிட்சர்லாந்து வீரர் ஹெர்டன் ஷக்கிரி கோல் அடித்ததால், சமனானது. பின்னர் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி கிக் முறை நடைபெற்றது. இதில், 3க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்ற ஸ்பெயின் அணி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.