வெறிகொண்டு காத்திருக்கும் உலக நாயகனின் ரசிகர்கள்!!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், வரும் மே 15-ஆம் தேதி படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் படத்தின் முதல் பாடல் வரும் 11-ஆம் தேதி அதாவது இன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விக்ரம் படத்தின் “பத்தல பத்தல ” என்ற முதல் பாடலை உலக நாயகன் கமல்ஹாசனே எழுதி பாடியுள்ளாராம். இதனை அதிகாரப்பூர்வமாக இசையமைப்பாளர் அனிருத் அறிவித்துள்ளார். உலக நாயகன் குரலில் இன்று வெளியாகவுள்ள இந்த பாடலை பார்க்க ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது.