Father and Daughter drown while try to cross Mexico border

எல்-சல்வடார் நாட்டைச் சேர்ந்த ஆஸ்கர் ஆல்பெர்டோ மார்ட்டினஸ் பிழைப்புக்கு வழி தேடி அமெரிக்காவுக்கு தஞ்சமடைய முற்பட்ட நிலையில் மெக்சிகோ - அமெரிக்கா எல்லையிலுள்ள ஆற்றை கடக்கும் போது ஆல்பெர்டோ மார்ட்டினஸ் மற்றும் அவரது ம்=இரண்டு வயது மகள் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி டானியா அவலோஸ் மற்றும் 2 வயது மகள் ஆங்கி வலேரியா ஆகியோருடன் ஆஸ்கர் ஆல்பெர்டோ மார்ட்டினஸ் அமெரிக்க எல்லையை ஒட்டி அமைந்துள்ள, மெக்சிகோவின் மட்டமோரோஸ் நகருக்கு சென்றார். அங்குள்ள பாலம் ஒன்று மூடப்பட்டிருந்ததால் ஆற்றின் கரையை கடந்து செல்ல முயன்றனர். முதலில் தனது மகளை தொழில் சுமந்து சென்று அக்கரை சேர்த்த ஆஸ்கர், தனது மனைவியை அழைக்க வேண்டி மீண்டும் வந்தார்.

தனியாக நின்ற குழந்தை பயத்தில் தண்ணீரில் விழுந்தது. இதைக் கண்டு திகைத்த ஆஸ்கர் ஆல்பெர்டோ, மகளை தனது சட்டையுடன் பிணைத்துக் கொண்ட பொது கடல் ஆற்று நீரின் சீற்றம் அதிகமானது. இதனால் தந்தை மற்றும் மகள் தண்ணீரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆஸ்கர் ஆல்பெர்டோ மற்றும் மகள்கள் உடலின் புகைப்படம் கண்டா அனைவரையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.