கால்பந்து போட்டி: ஐதராபாத் எப்.சி.

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஐதராபாத் எப்.சி.-ஏ.டி.கே.மோகன் பகான் அணிகள் இடையிலான ஆட்டம் டிராவானது. 11 அணிகள் இடையிலான 7-வது இ்ந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் நேற்று இரவு நடந்த ஐதராபாத் எப்.சி.-ஏ.டி.கே.மோகன் பகான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் சந்திக்கின்றன.