G 20 Summit starts in Japan today

ஜப்பான் ஒசாகா நகரில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள நிலையில் ஜி 20 நாடுகளின் தலைவர்கள் ஒசாகா நகருக்கு வந்துள்ளனர். அவர்களின் வரவேரூ நிகழ்ச்சியுடன் ஜி 20 மாநாடு தொடங்கியது.

ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களை, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனித்தனியாக வரவேற்று மேடைக்கு அழைத்தார். தலைவர்கள் அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதற்கு பின் மாநாட்டின் முதல் அமர்வு தொடங்கியது. வர்த்தக பாதுகாப்புவாதம் அதிகரித்து என்றும், உலகளாவிய வர்த்தகத்தின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாகவும் அதனால் தடையற்ற, நியாயமான வர்த்தகத்தை ஆதரிக்க வேண்டும் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வலியுறுத்தினார்.