கடந்த மார்ச் மாதம் கேரளா வந்த ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண் காணமால் போன நிலையில் அவரை உலகம் முழுவதும் தேடுவதராக இன்டர்போல் அமைப்பு மஞ்சள் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த லிசா வெயிஸ் என்னும் இளம்பெண் கடந்த மார்ச் மாதம் ஏழாம் தேதி கேரளா வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து கொல்லத்திலுள்ள ஆஸ்ரமம் ஒன்றிற்கு செல்ல இரு சக்கர வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். இந்நிலையில் லிசா மாயமாகியுள்ளார். விசா காலம் முடிந்த நிலையிலும் லிசா சொந்த ஊர் திரும்பாததால் விசாரணை தீவிரமானது.
விசாரணையில் முகமது அலி என்னும் நண்பருடன் லிசா கேரளா வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில ஆண்டுகளுக்கு முன் லிசா முஸ்லீம் மதத்திற்கு மாறியதாகவும், மெமெம் தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகவும் பல துடிக்கும் தகவல் விசாரணையில் வெளியாகியுள்ளது.
லிசா மாயமான விவகாரம் தொடர்பாக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலும் தேடி வருவதால் லிசாவை தேடுவதற்காக மஞ்சள் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்த நோட்டீஸ் அணைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.