தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரிப்பு... நடுத்தர வர்க்கத்தினர் அதிர்ச்சி!!

தங்கம் விலை கடந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால் இந்த வார தொடக்கத்தில் இருந்தே விலை அதிகரித்து வருகிறது.

கடந்த 9ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு பவுன் தங்கம் ரூ.38,872க்கு விற்கப்பட்டது. மறுநாள் 10-ந்தேதி அது 38,768 ஆக குறைந்தது. 11-ந்தேதி அது ரூ.38,440 ஆக குறைந்தது. 12-ந்தேதி சற்றே அதிகரித்து ரூ.38,584 என்றானது. மறுநாள் 13-ந்தேதி மீண்டும் அதிரடியாக பவுன் ரூ.38,040 ஆக குறைந்தது.

கடந்த சனிக்கிழமை மீண்டும் குறைந்து ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்தது. அன்று ரூ.37,896க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அதே விலையில் நீடித்தது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.37,824க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வாரத்தில் தங்கம் விலை மீண்டும் உயரத்தொடங்கி ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஒரேநாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.344 அதிகரித்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,168க்கு விற்கப்படுகிறது.

இந்திய சாமானிய குடும்பங்களில் தங்கம் வாங்குவது என்பது ஒரு சிறந்த முதலீடாகவே பார்க்கப்படுகிறது. இந்த விலையேற்றம் சாமானிய மக்களுக்கு அயர்ச்சியை கொடுத்துள்ளது.

ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.4,728க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.43 அதிகரித்து ரூ.4,771க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.64.20க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.20 அதிகரித்து ரூ.65.40க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.65,400க்கு விற்கப்படுகிறது.