தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு..! தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்வு…!

தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரி7.5  சதவீதத்திலிருந்து 12.5% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை 7.5  சதவீதத்திலிருந்து 12.5% ஆக உயர்த்தி உள்ளது. தங்கத்தின் இறக்குமதியை குறைத்து அந்நிய செலவாணி வெளியேறுவதை தடுக்கும் நோக்கில் தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதால், தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.