Hollywood Actor feel sad for Chennai Water scarcity

சமீபத்தில் அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ், சென்னை குடிநீர் பஞ்சம் குறித்து செய்தி வெளியிட்டு இருந்தது. அதில் 2018 ஜூன் மாதம் மற்றும் இந்தாண்டு ஜூன் மாதம் எடுக்கப்பட்ட புழல் ஏரியின் நீர் இருப்பின் அளவு ஒப்பிடப்பட்டு புகைப்படம் ஒன்று வெளியானது.

கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்த நிலையில் சென்னை மக்கள் கடந்த தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் தண்ணீர் பஞ்சம் குறித்து ஹாலிவுட் நடிகர் ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, 'மழையால் மட்டுமே சென்னையை இந்த சூழ்நிலையிலிருந்து காப்பாற்ற முடியும். நான்கு முக்கிய நீர் தேக்கங்கள் முற்றிலும் வறண்டு விட்டன. குடியிருப்பாளர்கள் அரசாங்க தொட்டிகளில் இருந்து தண்ணீரைப் பெற மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியது உள்ளது. நீர் நிலைகள் குறைந்து விட்டதால் உணவகங்கள் மூடப்பட்டு விட்டன' என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.