ஏற்காட்டிற்கு அணிவகுத்த நூற்றுக்கணக்கான வாகனங்கள்.. திணறிய காவல்துறை!

கொரோனா  ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் தமிழக அரசு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள பகுதியில் உள்ள ஊர்களுக்கு செல்வதற்கு அவசியம் உள்ள நபர்கள் மட்டும் உரிய ஆதாரத்துடன் இ பாஸ் பெற்று செல்ல வேண்டுமென்று அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து பல நூற்றுக் கணக்கான கார்களில் மக்கள் சுற்றுலாத் தளங்களுக்கு படையெடுத்து உள்ளனர்.

இவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர், மேலும் மாவட்ட நிர்வாகம் கண்டும் காணாமல் இருப்பது சேலம் மாவட்டத்தில் குறைந்து வரும் தொற்றை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.

ஏற்காடு அடிவாரம் பகுதியில் மூன்று இடங்களில் அமைக்கப்பட்டிருந்த காவலர் வாகன சோதனை சாவடி  தற்பொழுது செயல்படாததால் நூற்றுக்கணக்கான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அப்பகுதியில் சென்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.