பாடல்களை சூப்பர் ஹிட் ஆக்காமல் விடமாட்டேன்.! “தளபதி 66” குறித்து தமன்…

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிதளவில் ஈர்க்கவில்லை என்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது . இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சரத்குமார் பிரபு பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். சமீப காலங்களில் இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் வைரல் ஹிட் ஆகி வருகின்றன. இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில்,  தளபதி 66 படத்தின் பாடல்கள் குறித்தும் விஜய்யுடன்  பணியாற்றுவது குறித்து இசையமைப்பாளர் தமன் சமீபத்திய பிரத்தியேக பேட்டி என்று சில சுவாரஸ்யமான சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “தளபதி 66 படம் ஒரு சிறந்த கதை. விஜய் சார் ஒரு அற்புதமான கதையை தேர்ந்தெடுத்துள்ளார். விஜய் சாரை பற்றி நான் எவ்வளவு உயர்வாக நினைக்கிறோனோ அது தளபதி 66 படத்தின் பாடல்களில் வெளிப்படும். படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆக்காமல் நான் விடமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.