”கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மூளையை ஸ்கேன் செய்வேன்”- விராட் கோலி

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது ஆஸ்தான கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

முன்னதாகவே விராட் கோலி தனக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவை மிகவும் பிடிக்கும் என கூறியிருக்கிறார். இந்நிலையில் தற்போது பேசிய அவர், நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவாக இருந்தால் எனது மூளையை ஸ்கேன் செய்து பார்ப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால், அவருக்கு இருக்கக்கூடிய அந்த மன வலிமை எங்கிருந்து வருகிறது என்பதை ஆராய்ச்சி செய்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.