கடந்த பிப்ரவரி 14 ம் புல்வாமா தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் துபாயிலுள்ள இந்திய மக்கள், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அபு தாபியிலுள்ள தூதரகத்தில் வைத்து நடைபெற்றது.
இந்திய தூதர் நவதீப் சுரி, " நமது பிரதமர் நரேந்திர மோடி நமக்காக பேசுகையில் தேசத்தின் ரத்தம் கொதிப்பதாகவும் இதற்காக தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என உறுதியளித்தார். சர்வதேச அமைப்புகள் பல தங்களது ஆதரவை இந்தியாவுக்கு அளித்து வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தங்கள் நாட்டிற்குள் அளிக்கும் ஆதரவை இத்துடன் முடித்து கொள்ள வேண்டும்" எனவும் எச்சரித்துள்ளார். மேலும் ' சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக வரும் வதந்திகளுக்கு ஆதரவளிக்காமல் அவற்றை புறந்தள்ள வேண்டும் ' எனவும் கூறியுள்ளார்.