இந்திய சீன எல்லைப் பிரச்சனை- வரலாற்று பின்னணி என்ன?

சமீப காலத்தில் இல்லாத அளவிற்கு லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. மே மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே இந்திய எல்லைப் பகுதிகளில் ஆங்காங்கே அத்து மீற தொடங்கியது சீன ராணுவம். இந்திய பகுதிக்குள் முன்னேறி வந்த சீன நாட்டு ராணுவ வீரர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர் இதனால் இரு தரப்பிற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. எனினும், துப்பாக்கி சூடு, தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை எனினும் நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் உருவானது.

இந்த சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு லடாக்கின் எல்லைப் பகுதியிலும் இதே போன்ற மோதல் போக்கு ஏற்பட்டது அண்மையில் இந்திய ராணுவ தளபதி லடாக்கில் உள்ள படை முகாமிற்கு சென்று நிலைமையை நேரில் ஆய்வு செய்தார். இந்த சண்டைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை இந்த சம்பவம் சுட்டிக்காட்டியது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உருவாக்கப்பட்ட சர்வதேச எல்லைக்கோடு பின்பற்றப்படவில்லை என இந்திய அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது.

1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற போருக்குப் பிறகு படைகளின் எல்லையை குறிக்கும் வகையிலான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் இரு நாடுகளும் இராணுவ ரீதியில் ஒப்புக் கொண்டு அதன் முறையே பயன்படுத்தி வருகின்றன. இதையும் பல நேரங்களில் சீன ராணுவ வீரர்கள் மதிப்பதில்லை இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைவதை அவ்வப்போது நடந்து கொண்டேதான் இருக்கிறது. தற்போது எல்லைக் கோட்டின் இரு பகுதிகளிலும் ராணுவ நடவடிக்கைகள் தீவிரம் அடைந்திருக்கின்றன. 

தொடக்கத்தில் எல்லைக்கோட்டை ஒட்டிய பகுதிகளில் சீனா மற்றும் இந்தியா என இரு நாடுகளுமே இராணுவ வீரர்களும் படைகளை குவித்து உள்ளிட்ட ராணுவ கட்டமைப்புகளை வெளிப்படுத்தி வந்தது இந்தியாவும் சாலைகள் பாலங்கள் முகாம்கள் உள்ளிட்டவற்றை பதிலடி கொடுத்து வருகிறது. இந்த இந்தியாவின் கட்டமைப்புகளில் மிகவும் முக்கியமானது லடாக்கின் மையப்பகுதியிலிருந்து கட்டுப்பாடு எல்லைக்கோடு வரையிலான 155 கிலோ மீட்டர் சாலை நகரிலிருந்த புக் வழியாக என்ற சீன எல்லைப் பகுதியை ஒட்டிய பகுதி வரை நீண்டுள்ளது இந்த சாலை வழியாக மிக எளிதாகவும் வேகமாகவும் படைகளை நகர்த்த முடியும்.

இந்தியாவின் ஆட்சிக்குட்பட்ட அருணாசல பிரதேசம் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என சீனா தொடர்ந்து பிடிவாதமாக கூறிவருகிறது. அதேபோல லடாக்கின் ஒரு பகுதியை ஆக்கிரமிக்கும் சீனா தனது மாநிலத்தின் அங்கம் எனவும் தொடர்ந்து கூறி வருகிறது இது தொடர்பாக மோதல் காரணமாகவே 1962 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பெரும் போர் ஏற்பட வழிவகுத்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீன அதிபர் ஜீ ஜின்பிங் மாபல்லபுரம் வருகை தந்தார் அங்கு நரேந்திர மோடியுடன் அவர் ஆலோசனையும் நடத்தினார். இது இரு நாடுகளின் நடுவே நட்பை அதிகரிப்பதற்கான முயற்சி என்றே கூறப்பட்டது. ஏனெனில் ஒரு சுற்றுலா பயணியைப் போல மாமல்லபுரம் வருகை தந்தார் சீ சின்பிங். பின் பல நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் குறைவதற்கான ஒரு முன்னெடுப்பு இந்தியாவால் நடத்தப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு சரியாக நிகழ்ந்து ஓராண்டு கூட முடியாத நிலையில் 1962 ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தியது போல ஒரு துரோகத்தைச் செய்து விட்டதாகவே அனைவரும் கூறுகிறார்கள்.

ஜவஹர்லால் நேருவைப் போல சீனாவிற்கு சிக்கலாக நரேந்திர மோடி எனும் ஆளுமை இருக்கிறார். அப்போது நேரு எவ்வாறு ஒரு ஆளுமையாக உலக நாடுகளால் பார்க்கப்பட்டார் இப்போது மோடியை அதைப்போல ஒரு ஆளுமையாக ஒரு நடத்த விடக்கூடாது என்பதில் சீனா மிகவும் கவனம் செலுத்துவதாக கூறப்பட்டு வருகிறது. மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களும், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடன் மோடி காட்டும் நெருக்கமும் சீனாவிற்கு நேருவை நினைவு படுத்துகிறது என்று சொல்லப்படுகிறது.

ஆனால் சீனா ஒரு விஷயத்தை மறந்து விடவேண்டாம் 1962ஆம் ஆண்டில் இந்திய இராணுவம் இருந்தது போல் இப்போது இல்லை. சர்வ வல்லமை கொண்ட ராணுவமாக உலகின் அதிநவீன அணு ஆயுதங்களையும் போர் விமானங்களையும் மலைப்பாங்கான பகுதிகளில் சிறப்பாக செயல்படக்கூடிய லட்சக்கணக்கான வீரர்கள் கொண்ட இந்திய இளம் படை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை சீனா நினைவில் கொள்ள வேண்டும்.