சென்னை: கொடநாடு வீடியோ தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும், பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்கியதில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம்சாட்டினார்.
2 அடி நீள கரும்பு, சந்தையில் ரூ.5 க்கு விற்கப்படும் நிலையில் ரூ.15 க்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது என்றும் அரிசி, சர்க்கரை எடைகுறைவாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பொருட்களின் அடக்கவிலை யதார்த்தத்தை மீறி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.