பல பெண்களுடன் தொடர்பு... ஷங்கர் மகள் திருமண வரவேற்பு ரத்தானதன் காரணம் இதுவா?

இயக்குநர் ஷங்கரின் மகள் திருமண வரவேற்பு ரத்தானது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இயக்குநர் ஷங்கர். ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் இயக்குநராக அறிமுகமான ஷங்கர் தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், அர்ஜூன், விஜய் என முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

தற்போது கமலின் இந்திய 2 மற்றும் தெலுங்கு ஹீரோ ராம்சரணின் படம் என இரண்டு பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை இயக்கி வருகிறார். இயக்குநர் ஷங்கர் ஈஸ்வரி தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருமணத்தின் போது கொரோனா கட்டுப்பாடுகள் நிலுவையில் இருந்ததால் திருமண வரவேற்பை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தார் ஷங்கர். ஆனால் அதற்குள் ஷங்கரின் மருமகன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆனால் திருமணம் வரவேற்பு திடீரென நிறுத்தப்பட்டது. அழைப்பிதழ் கொடுத்தவர்களுக்கெல்லாம் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருமண வரவேற்பு நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஷங்கரின் மருமகன் ரோஹித்துக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் திருமணம் ஆன சில நாட்களிலேயே கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றி போயுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இரு குடும்பத்தினரும் பலமுறை அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனராம்.

இந்த நிலையில் ரிசெப்ஷன் நடத்துவதில் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு விருப்பம் இல்லை கூறப்படுகிறது. மேலும் ரோஹித்துடன் அவர் வாழ விரும்பவில்லை என்றும் விவாகரத்து செய்யும் முடிவில் உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனாலேயே திருமண வரவேற்பை நிறுத்தப்பட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.