நல்லதுக்கு காலம் இல்லையோ?! என நினைக்க தோன்றுகிறது..! – விஜயகாந்த்

தேமுதிக தலைமை கழகத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்த சமூக விரோதிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து விஜயகாந்த் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

கோடைகாலம் தொடங்கி மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், தமிழகத்தில், திமுக, அதிமுக, தேமுதிக போன்ற அரசியல் கட்சிகள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேமுதிக தலைமை கழகத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேமுதிக தலைமை கழகத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்த சமூக விரோதிகளுக்கு கடும் கண்டனம். மக்களின் தாகத்தை தணித்த தண்ணீர் பந்தலுக்கு, தீயவர்கள் தீ வைத்த சம்பவம், நல்லதுக்கு காலம் இல்லையோ?! என நினைக்க தோன்றுகிறது.’ என்று பதிவிட்டுள்ளார்.