விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்துவரும் நிலையில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் டேவிட் கோபினை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் மற்றும் டேவிட் கோபின் ஆகியோர் மோதினர். ஜோகோவிச்சின் அதிரடி ஆட்டத்திற்கு இணையாக கோபினிற்கு ஆட முடியவில்லை. மூன்று சுற்றிலும் முன்னிலை வகித்த ஜோகோவிச், கோபினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.