வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு சற்று முன்னர் கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாத நிலையில், வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு இன்று பக்தர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்றது.

அதன்படி,பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் மக்களின் பக்தி வெள்ளத்தில் மிதந்து வந்து வைகை ஆற்றின் நடுவே அறநிலையத்துறை அமைந்திருந்த மண்டகப்படியில் கம்பீரமாக கள்ளழகர் எழுந்தருளினார். இதனை காண வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆடி,பாடி மகிழ்ந்தனர்.

வைகையாற்றில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் மக்கள் ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.