அமெரிக்க செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு செனட்சபை உறுப்பினரானார்.
மூத்த வக்கீல் மற்றும் எழுத்தாளர் கமலா ஹாரிஸிற்கு அக்கட்சி மற்றும் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு உள்ளது. இதனால் அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை எதிர்த்து களமிறங்குவார் என செய்திகள் உலா வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று எல்ஜிபிடி சமூகத்தினர் நடத்திய ‘ப்ரைட் பாரடே’ பேரணியில் கமலா ஹாரிஸ் கலந்துக் கொண்டார்.
எல்ஜிபிடி சமூகத்தினரின் வானவில் நிறம் கொண்ட உடையணிந்த கமலா ஹாரிஸ் மேடையில் பேசி, பின் அனைவருடன் சேர்ந்து நடனமாடினார். இது குறித்து கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ' நடனமில்லாமல் விழாவை கொண்டாட முடியாது. எல்ஜிபிடியின் 'ப்ரைட் பாரடே’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமையடைகிறேன்' என பதிவிட்டுள்ளார்.