கொடைக்கானல்: 75 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பூங்காக்கள்

கொடைக்கானலில் 75 நாட்களுக்கு பிறகு பூங்காக்கள் திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உவகை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் தமிழ்நாடு அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி, கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் 75 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

பூங்காவிற்கு சென்ற சுற்றுலா பயணிகளுக்கு தோட்டக்கலை துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். வெப்ப பரிசோதனை செய்த பிறகே சுற்றுலா பயணிகள் பூங்காவிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பூங்கா திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக சுற்றுலாப்பயணிகள் தெரிவித்தனர்.