மீண்டும் டேவிஸ் கோப்பையில் விளையாடும் லியாண்டர் பயஸ்!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலானா டேவிஸ் கோப்பை வரும் நவம்பர் 29,30 தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை பாகிஸ்தான் அல்லாமல் பொதுவான நாட்டில் நடத்த வேண்டும், என்ற இந்திய டென்னிஸ் சங்கத்தின் கோரிக்கையை, சர்வதேச டென்னிஸ் சங்கம் நிராகரித்ததை தொடர்ந்து, முன்னணி இந்திய வீரர்கள் பலர் இப்போட்டியில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் ஓராண்டு இடைவெளிக்கு பிறகு இந்திய டேவிஸ் கோப்பை டென்னிஸ் அணிக்கு மூத்த வீரர் லியாண்டர் பயஸ் திரும்புகிறார். 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் ஆடிய லியாண்டர் பயர், அதன் பிறகு இப்போட்டியின் மூலம் இந்திய அணிக்காக டென்னிஸ் விளையாடுகிறார்.

முன்னணி வீரர்கள் கலந்துக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இளம் வீரர்களைக் கொண்டு புதிய இந்திய டென்னிஸ் அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய டென்னிஸ் சங்கம், முழுமையான அணி தேர்வு செய்யப்பட்டவுடன் கேப்டன் யார்? என்பதை அறிவிக்க உள்ளனர்.