கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திற்கு கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுபோன்று கொல்லிமலையில் ஆகஸ்ட் 1 முதல் 3-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, கொல்லிமலை செம்மேடு, சோளக்காடு, செங்கரையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.