இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்கள், நெல்லை மாவட்டம் ஏல்வாடி எனும் பகுதியை சேர்ந்தவர், இவர் கடந்த 1994-ம் அண்டு இஸ்ரோவில் கிரையோஜெனிக் இன்ஜின் வடிவமைப்புக்கு குழுவின் தலைவராக இருந்தார். பின்பு கிரயோஜெனிக் இன்ஜினுக்கான திரவ எரிபொருள் தயாரிப்பு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுவந்தார்.
மேலும் விக்ரம் சாராபாய், அப்துல்கலாம், சதீஷ் ராவ் போன்ற புகழ்பெற்ற விஞ்ஞானிகளுடன் பணியாற்றியவர் இந்த நம்பி நாராயணன் அவர்கள். கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளுக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு, 50நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இஸ்ரோ
பின்பு இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ ஜோடிக்கப்ட்ட குற்றச்சாட்டு என்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளித்ததால், நம்பி நாராயணனின் விடுதலை செய்யப்பட்டார். குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டதால், இஸ்ரோவில் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.
முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை இருந்தபோதிலும் இஸ்ரோவில் இவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராக்கெட் தொழில்நுட்பத்தில் இந்தியா ஒருகாலத்தில் ரஷ்யாவைச் சார்ந்துதான் இருந்தது. கடந்த 1992-ம் ஆண்டு கிராயோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குத் தர, ரஷ்யா முன்வந்தது, ஆனால் அமெரிக்கவும, பிரான்ஸும் இணைந்து இந்தியாவுக்கு கிரயோஜெனிக் தொழிலநுட்பத்தைத் தரக் கூடாது என்று ரஷ்யாவை நிர்பந்தித்தன, பின்பு ரஷ்யா பின்வாங்கியது.
சந்திராயன்-1
அதன்பிறகு தான் இந்தியாவே கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க முடிவுசெய்து, அந்தக் குழுவின் தலைவராக நம்பி நாராயணனை நியமித்தது. பிஎஸ்எல்வி (Polar Satellite Launch Vehicle) ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் விகாஷ் இன்ஜின், நம்பி நாராயணன் தலைமையிலான குழு கண்டுபிடித்ததுதான். மேலும் பிஎஸ்எல்வி வழியாகத்தான் 2008-ம் ஆண்டு சந்திராயன்-1விண்வெளிக்கு ஏவப்பட்டது.
சிக்க வைத்தது எப்படி?
1994-ம் ஆண்டு மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதா என்கிற பெண்ணிடமிருந்து இஸ்ரோ தயாரித்த ராக்கெட்டுகளின் வரைபடங்கள் கைப்பற்றப்பட்டன. இந்தப் பெண்ணிடம் இருந்து விஞ்ஞானி நம்பி நாராயணனின் உதவியாளர் சசிக்குமார் என்பவரின் எண் கிடைத்தது.
சசிக்குமாருடன் மரியம் ரஷீதா பேசியுள்ளதாகச் சொல்லப்பட்டது. முதலில் சசிக்குமாரும் தொடர்ந்து 1994-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி நம்பி நாராயணனும் கைதுசெய்யப்பட்டனர். முன்னதாக நவம்பர் முதல் தேதி நம்பி நாராயணன் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்திருந்தார்.
இது நம்பி நாராயணன் மீது சந்தேகத்தை அதிகரித்தது. நம்பி நராயணன் வீட்டில் ஐ.பி அதிகாரிகள் சோதனையிட்டபோது 75 கிலோ எடைகொண்ட இஸ்ரோ தொடர்பான ஆவணங்கள் கிடைத்தன. 1996-ம் ஆண்டு சி.பி.ஐ அளித்த அறிக்கையில், ஹவிஞ்ஞானிகள் வீட்டுக்கு, அலுவலகம் தொடர்பான கூட்டங்களுக்கு ஆவணங்களை எடுத்துச் செல்வது வழக்கமானதுதான்.
நம்பி நாராயணன் மீது ஜோடிக்கப்பட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டிருந்தது. நம்பி நாராயணன் கைதுக்குக் காரணமான ஐ.ஜி சிபு தாமஸ் உள்ளிட்டவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது. ஆனால், கேரள அரசு போலீஸ் அரசு அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நம்பி நாரயணன் கைது நடவடிக்கையால் இந்தியாவின் கிரயோஜெனிக் இன்ஜின் தயாரிப்பில் 10 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. தன்னைக் கைதுசெய்த விஷயத்தில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ அமைப்பின் கைங்கரியமும் இருப்பதாக நம்பி நாராயணன் தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.