'கைதி' டில்லிக்கு வில்லனாகிறார் 'மாஸ்டர்' பவானி?!

நடிகர் கார்த்தி தற்போது சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், கார்த்தி நடிக்கவுள்ள 24-வது படத்திற்கான தகவல் குறித்த ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், கார்த்தியின் 24-வது படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்கவுள்ளார் என்பது தான்.

இவர் இதற்கு முன்பு குக்கூ, ஜோக்கர், ஜிப்சி போன்ற விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்கள் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது. இந்த படங்களை தொடர்ந்து கார்த்தியை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்க ராஜு முருகன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிக்க வைக்க ஹீரோ வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் தயங்காமல் நடித்து கலக்கி வரும் விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், விஜய் சேதுபதி கமல்ஹாசனுக்கு வில்லனாக விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைபோல் கார்த்தியின் மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.